Hopelight Worship
Ethanai Anbu
உமக்காகவே நான் வாழ்கிறேன்
எனக்காகவே நீர் மரித்தீர்
என் பாவம் போக்கும்
நல் ஜீவ பலியாய்
ஒப்புக்கொடுத்தீர் என் ஆண்டவா
எத்தனை அன்பு என்மேல்
என்ன சொல்லி பாடுவேன்
பாவியாய் இருக்கையிலே
எனக்காக மரித்தவரே
கிருபையினால் என்னை நீதிமானாக்கி
அழகு பார்த்தவரே
செய்வேனோ பாவமினி ;
புரிவேனோ துரோகமினி.
உம்மோடு நான் மரிக்கும்
பாக்கியம் எனக்கு தந்தீர்
உம்மோடு கூட என்னையும் எழுப்பி
உன்னதம் அமர செய்தீர்
மரித்தேனே பாவத்திற்கு
பிழைத்தேனே தேவனுக்கு.
உம்மோடு வாழ்கிறேனே
சிலுவையின் மேன்மையிதே
நீர் என்னிலும் என்றும் நான் உம்மிலும்
வாழும் நித்திய உறவு தந்தீரே
மறப்பேனோ பேரன்பை ;
இழப்பேனோ உம் உறவை.
எத்தனை அன்பு என்மேல்
எப்படி நான் மறப்பேன்
எப்பெரும் பாவி என்றாலும்
அணைத்திடும் தெய்வமல்லோ
✍️Bennet Christopher
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.
