Hopelight Worship
பாடல் 131: இயேசு நம்மோரு இன்று…….
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் (2)
அல்லேலூயா அஆர்ப்பரிப்போமே
அல்லேலூயா அகமகிழ்வோமே (2)
காரிருள் நம்மைச் கசூழ்ந்தாலும்
கர்த்தர் ஓளியாவார் (2)
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் (1)
உலகின் ஒளி நாமே - அல்லேலூயா (1)
(இயேசு நம்மோடு......)
வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு (2)
அவரின் தூய தழும்புகளால் (1)
குணம் அடைகின்றோம் நாம் - அல்லேலூயா (1)
(இயேசு நம்மோடு......)
மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை (2)
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம் (1)
சிலுவையைச் சுமந்திடுவோம் - அல்லேலூயா (1)
(இயேசு நம்மோடு......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.