Hopelight Worship
பாடல் 13: போந்றித் துதிப்போம் எம்…….
போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நாம்
என்றும் பாடித்துதிப்போம் (2)
இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன் (2)
கோரப் பயங்கரமான புயலின்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன் (2)
(இயேசு என்னும் நாமமே......)
யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்ப்பின் ஜெயத் தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன் (2)
(இயேசு என்னும் நாமமே......)
தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து ஜீவ
பாதை என்றும் ஓடுவேன் (2)
(இயேசு என்னும் நாமமே......)
பூமியகிலமும் சாட்சியாகவே
போங்க ளென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவுமின்று
தந்து தொண்டு செய்குவேன் (2)
(இயேசு என்னும் நாமமே......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.