Hopelight Worship
பாடல் 122: கர்த்தானே உமது கூடாரத்தில்….
கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
கூடியிருப்பவன் யார்
(கர்த்தாவே உமது......)
உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலைநிற்பவன் (2)
மனதாற சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே (2)
(கர்த்தாவே உமது......)
நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல் (2)
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே (2)
(கர்த்தாவே உமது......)
கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன் (2)
ஆணையிட்டு நஷீடம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே (2)
(கர்த்தாவே உமது......)
கைகள் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன் (2)
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே (2)
(கர்த்தாவே உமது......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.