Hopelight Worship
பாடல் 101: கலங்காதே கலங்காகே…….
கலங்காதே கலங்காதே (1)
கர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார் (1)
கலங்காதே கலங்காதே......
முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக (2)
பாவங்களை அறிக்கையிடு (1)
பரிசுத்தமாகிவிடு - நீ (1)
(கலங்காதே கலங்காதே......)
கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார் (2)
கரம் விரித்து அழைக்கின்றார் (1)
கண்ணீரோடு ஓடிவா - நீ 01)
(கலங்காதே கலங்காதே......)
காலமெல்லாம் உடனிருந்து
கரம் பிடித்து நடத்திச் செல்வார் (2)
கண்ணீரெல்லாம் துடைப்பார் (1)
கண்மணிபோல்க் காத்திடுவார் - உன்னைக் (1)
(கலங்காதே கலங்காதே......)
உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு (2)
மலைமேல் உள்ள பட்டணம் (1)
மறைவாக இருக்காதே - நீ (1)
(கலங்காதே கலங்காதே......)
உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம் (2)
உன்னை அழைத்தவரோ (1)
உள்ளங்கையில் ஏந்திடுவார் - உன்னை (1)
(கலங்காதே கலங்காதே......)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.