Hopelight Worship
எப்போதும் என் முன்னே – Eppodhum En Munnae
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே
1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே
என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா
2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே
தகப்பனே, நீரே என் தெய்வம்
உம்மையன்றி வேறு செல்வம்
எனக்கு இல்லையப்பா
3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர்
என் மேய்ப்பர் நீர்தானைய்யா
குறை ஒன்றும் எனக்கில்லையே
பேரின்பம் நீர்தானய்யா
நிரந்தர பேரின்பமே
என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.
