Hopelight Worship
பாடல் 120: விசுவாசத்தினால் நீதிமாண்…….
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே (2)
கலங்காதே திகையாதே விசுவாசியே (1)
கல்வாரி நாயகன் கைவிடாரே (1)
(விசுவாசத்தினால்...)
தந்தை தாய் என்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் (2)
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்தக் கரங்களால் அணைத்துக்கொள்வார்
(விசுவாசத்தினால்...)
பிறர் வசை கூறித் துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது (2)
நீ மகிழ்ந்து களி கூறு
விண் கைமாறு மிகுதியாகும்
(விசுவாசத்தினால்...)
கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும் 2)
அன்று எலியாவைப் போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
(விசுவாசத்தினால்...)
The chords for this song haven’t been added yet.
The English lyrics haven’t been added yet.
The English chords haven’t been added yet.